சதம் அடித்த ஜெமிமா ,ஆட்ட நாயகி விருதை வென்றார். இந்தியா வெற்றி.
இந்தியா வந்துள்ள அயர்லாந்து பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.. முதல் போட்டியில் இந்தியா வென்றது. நேற்று, ராஜ்கோட்டில் 2வது போட்டி நடந்தது.இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதம் கடந்து கைகொடுக்க, இந்திய பெண்கள் அணி 116 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 370 ரன் குவித்தது.இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3, பிரியா மிஷ்ரா 2 விக்கெட் சாய்த்தனர்.
கடந்த 2018ல் இந்திய அணியில் அறிமுகமான ஜெமிமா ரோட்ரிக்ஸ், 7 ஆண்டுகளுக்கு பின் தனது முதல் சர்வதேச சதத்தை நேற்று பதிவு செய்தார். ஜெமிமா கூறுகையில், "சர்வதேச அரங்கில் முதல் சதம் அடித்ததில் மகிழ்ச்சி. இத்தருணத்திற்காக 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. இன்னும் நிறைய சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு கைகொடுக்க விரும்புகிறேன்," என்றார். ஆட்ட நாயகி விருதை ஜெமிமா வென்றார்.
0
Leave a Reply